'சேவை நோக்கத்தால் வாழ்வு வலிமையாகும்' முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு
'சேவை நோக்கத்தால் வாழ்வு வலிமையாகும்' முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு
ADDED : ஆக 03, 2024 09:53 PM

மதுரை:மதுரை மடீட்சியா அரங்கில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பதவி ஏற்பு விழா நடந்தது. அமர்சேவா சங்கத் தலைவர் ஆய்குடி ராமகிருஷ்ணன், செயலர் சங்கர்ராமன், மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிர்வாக இயக்குனர் பூமிநாதன், திருச்சி தமிழிசை சங்க நிறுவனர் சீனிவாசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மதுரை காந்தி மியூசியம் செயலர் நந்தாராவ், அரபிந்தோமீரா பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிலாஷ், சத்தியம் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், திருச்சி டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் ஆகியோருக்கு 'வொகேஷனல் எக்சலன்ஸ்' விருது வழங்கப்பட்டது. மேலும் 2,000 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் சேகரித்து அரசு மருத்துவமனைக்கு வழங்கிய பெண்ணுக்கு சிறப்பு விருதும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கல்வி உதவித்தொகையாக 25,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
சேவையில், பிறருக்கு கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைப்பதில்லை. சேவையை நோக்கமாக, கொள்கையாக, லட்சியமாக, அடித்தளமாக கொண்டால் வாழ்க்கை வலிமையாக இருக்கும். இதில் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையும் சேவைதான். விதி வலிமையானது. அதனை எளிமையாக கடந்து செல்ல, சேவை என்னும் துடுப்பு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு உதயகுமார் பேசிானர்.