தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வன்கொடுமை சட்டத்தில் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு

வன்கொடுமை சட்டத்தில் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு

வன்கொடுமை சட்டத்தில் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு


UPDATED : அக் 31, 2026 09:20 PM

ADDED : அக் 31, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 09:20 PM ADDED : அக் 31, 2026 09:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அருகே, பெட்ரோல் பங்க் ஊழியர்களை ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி தாக்கியதாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, 57, உட்பட மூவர் மீது வன்கொடுமை சட்டத்தில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி அருகே, செட்டிகரையில், தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், அக்., 26ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தன் ஆதரவாளர்களுடன் சென்று, பண விவகாரம் தொடர்பாக ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது, பங்கில் பணியிலிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், ஜாதி பெயரை கூறி இழிவுபடுத்தி பேசியதாக, பங்கில் பணிபுரிந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். அவர் ரகளையில் ஈடுபட்ட, ‘சிசிடிவி’ காட்சிகள் இணையத்தில் பரவியது.

விசாரித்த தர்மபுரி டவுன் போலீசார், கோவிந்தசாமி, அவரது உதவியாளர் லோகேஷ், 38, அன்பு, 49, ஆகிய மூவர் மீதும் எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us