ADDED : ஜன 04, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தி.மு.க., தலைமை நிலையச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கு.க.செல்வம், 70 உடல் நல குறைவால் உயிரிழந்தார்.அ.தி.மு.க.,வில் இருந்த கு.க.செல்வம், எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின், தி.மு.க.,வில்இணைந்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தி.மு.க., தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பா.ஜ.,வில் இணைந்தார்.அங்கு சிறிது காலம் இருந்த நிலையில், மீண்டும் தி.மு.க.,வுக்கு திரும்பினார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் நேற்று உயிரிழந்தார்.அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அஞ்சலி செலுத்தினர்.