'மாஜி' எம்.பி.,க்கு அபராதம் : கடலுார் கோர்ட் தீர்ப்பு
'மாஜி' எம்.பி.,க்கு அபராதம் : கடலுார் கோர்ட் தீர்ப்பு
ADDED : மார் 29, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு கூறியது.
பண்ருட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். கடலுார் முன்னாள் தி.மு.க., எம்.பி.,யான இவர், முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இதற்கான நிறுவனத்தின் லைசென்ஸ் மற்றும் அதிலுள்ள மெஷின்களின் லைசென்ஸ் புதுப்பிக்க தவறியது தொடர்பாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் கடலுார் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கோவர்தனன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்கண்ணன், ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.