ADDED : செப் 09, 2025 05:39 AM

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன்.
இவர், பா.ஜ.,வில் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, கடந்த 2015 டிசம்பரில் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு, அப்பொறுப்பில் எட்டு ஆண்டு காலம் பணியாற்றினார்.
க டந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறவும், கூட்டணி ஆட்சி அமையவும் காரணமாக அமைந்தார்.
இந்நிலையில், கடந்த 2023ல், சாமிநாதன் மாற்றப்பட்டு, செல்வகணபதி எம்.பி., புதுச்சேரி பா.ஜ., தலைவராக நியமிக்கப் பட்டார். அதன்பின், சாமிநாதனுக்கு கட்சி பொறுப்பு எதுவும் வழங்கப்படாததோடு, அவருடைய ஆதரவாளர்களிடம் இருந்தும், பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதனால், கட்சி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், 33 ஆண்டு கால, தன் பா.ஜ., அரசியல் பயணம் முடிவுக்கு வருவதாக தெரிவித்துவிட்டு, அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார்.