ADDED : ஆக 16, 2025 01:29 AM
சென்னை:அரசு பள்ளிகளில், முன்னாள் மாணவர்களை துாது வர்களாக நியமனம் செய்வதற்கான வழி காட்டுதல்களை பள்ளி கல்வித் துறை வெளியிட்டு உள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கடந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி, 'விழுதுகள்' என்ற முன்னெடுப்பு துவக்கப்பட்டது.
இதுவரை, 8.5 லட்சம் முன்னாள் மாணவர்கள், தங்கள் பள்ளியுடன் இணைந்துள்ளனர்.
அடுத்த கட்டமாக, முன்னாள் மாணவர்களை, பள்ளி துாதுவர்களாக நியமிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6,000 பள்ளி களில் முதற்கட்ட முயற்சியாக, சாதனை செய்த முன்னாள் மாணவர்கள், அந்த பள்ளி துாதுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இவ ர்கள், தற்போது படிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டுவது, பள்ளியின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். விண்ணப்பிப்பவர்கள், அந்த பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் படித்தவராக இருக்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.