உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 03, 2026 12:39 AM
அ நிறம் | அளவு
சென்னை: பயிர்க் கடன்களை முழுதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், இந்த போராட்டம் நடந்தது.
பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் எல்.ஜி., ரவுண்டானாவில் இருந்து கோஷங்களை எழுப்பியபடி, கோட்டையை நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 58 பேரை கைது செய்தனர்.
