33 மாத கால ஆட்சியில் 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல்: தமிழக அரசு
33 மாத கால ஆட்சியில் 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல்: தமிழக அரசு
ADDED : பிப் 08, 2024 07:01 PM

சென்னை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. என தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம்
ரூ.8.65 லட்சம் கோடி முதலீட்டுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது இதன் வாயிலாக 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவக்கப்பட்டுள்ளது. 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் 27 தொழிற்சாலை திறப்பு மூலம் 74,757 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 2030 ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரி்க்கடாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.
மேலும் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு மூலம் ரூ.1,90,803 ஆயிரம்கோடி அளவுக்கான முதலீடுகள் ஈர்ப்பு, மற்றும் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு மூலம் 2லட்சத்து 80 ஆயிரத்து 600 பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம்,சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.7,441 கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

