தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விபத்தில் நான்கு பேர் பலி நிவாரணம் வழங்க உத்தரவு

 விபத்தில் நான்கு பேர் பலி நிவாரணம் வழங்க உத்தரவு

 விபத்தில் நான்கு பேர் பலி நிவாரணம் வழங்க உத்தரவு


ADDED : மே 12, 2026 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கோவை மாவட்டத்தில் நடந்த விபத்தில் பலியான, நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

கோவை மாவட்டம், கிணத்துகடவு அருகே பொள்ளாச்சி - பல்லடம் சாலையில், 11ம் தேதி, சேலம் காடையாம்பட்டியை சேர்ந்த தனபால், 37, மேனகா, 35, சினேகா, 23, கனிஷ்கா, 17, சுர்ஜித், 12 ஆகியோர் காரில் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் சரக்கு லாரியை, பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டியுள்ளார்.

அவரது சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது மோதியதில் தனபால், மேனகா, சினேகா, கனிஷ்கா ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரகரமான செய்தியை கேட்டு, மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் படுகாயம் அடைந்த சுர்ஜித், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுர்ஜித்திற்கு, ஒரு லட்சம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us