ADDED : மே 23, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கான அடையாள அட்டை பெற, கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கூறியுள்ளது.
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழக அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கலைஞர்களின் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விருது பெற்ற அனைவரின் விபரங்களையும் சேகரிக்க இயலவில்லை.
எனவே, விருது பெற்ற கலைஞர்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் புகைப்படம் இணைத்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், பொன்னி, 31, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28 என்ற முகவரிக்கு, ஜூன் 10க்குள் அனுப்ப வேண்டும் என மன்றம் தெரிவித்துள்ளது.