தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இலவச பட்டா திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

 இலவச பட்டா திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

 இலவச பட்டா திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு


ADDED : செப் 03, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசுக்கு ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போர், பட்டா கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது போன்ற நிலங்களில், ஐந்து ஆண்டுகள் குடியிருப்போருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம், 2018ல் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு, அதில் வசிப்போருக்கு, ஆக்கிரமிப்பை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கப்படுகிறது.

இதேபோல், நீர்நிலைகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கு, வேறு புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கி, பட்டா வழங்கப்படும்.

வேறு புறம்போக்கு நிலங்கள் இல்லாத நிலையில், அப்பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தி, அதில் பட்டா வழங்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கான கால அவகாசம், ஆக., 30ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, இந்த அவகாசம் 2027 ஆக., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, வருவாய் துறை பிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us