தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சரின் சர்ச்சை கருத்து தி.மு.க., எதிர்ப்பால் நீக்கம்

 அமைச்சரின் சர்ச்சை கருத்து தி.மு.க., எதிர்ப்பால் நீக்கம்

 அமைச்சரின் சர்ச்சை கருத்து தி.மு.க., எதிர்ப்பால் நீக்கம்


ADDED : செப் 03, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ச ட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - ராஜேந்திரன்: காட்டு பன்றி தொல்லையால், விவசாயம் சீர்குலைந்துள்ளது.

இ.கம்யூ., -ராமச்சந்திரன்: காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து, கேரளாவில் நீக்கியுள்ளனர். அதேபோல இங்கும் நீக்க வேண்டும். காட்டுபன்றியை, சுட அனுமதிக்க வேண்டும்.

அமைச்சர் ரஞ்சித்குமார்: சுடுவதற்கு நாங்கள் அனுமதி தர முடியாது; அதற்கு விதிமுறைகள் உள்ளன.

இவ்வாறு கூறிய அமைச்சர், சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த விவாதம்:

அமைச்சர் ரஞ்சித்குமார்: அண்ணா 'சாரி'ண்ணா, எம்.எல்.ஏ., பேசியதால், நானும் பேசிவிட்டேன்.

அமைச்சர் செங்கோட்டையன்: கேரளாவில் காட்டுபன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறுவது தவறு. நாடு முழுதும் வனவிலங்கு பட்டியலில் தான் காட்டு பன்றி உள்ளது.

தி.மு.க., - தங்கம் தென்னரசு: அமைச்சர் கூறியது தவறான கருத்தை ஏற்படுத்தி விடும். காட்டு பன்றியாக இருந்தாலும், அது பாதுகாக்கப்பட்ட வன உயிரினம். எனவே அமைச்சர் கூறிய வார்த்தையை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அமைச்சர் கருத்தை, சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக, சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us