ADDED : ஜூன் 27, 2025 03:17 AM
சென்னை:இலவச பஸ் பயண அட்டையை, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோருக்கு செப்., 30 வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிக்கை:
மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர், இலவச பஸ் பயண அட்டைகளை இணையதளம் வழியே பெறும் வசதி, முதல் கட்டமாக மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வசதியை அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் விரிவுபடுத்தி, இலவச பயண அட்டைகளை புதிதாகப் பெறவும், ஏற்கனவே உள்ள பயண அட்டைகளை புதுப்பிக்கவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.பணிகளை முடிக்க அவகாசம் தேவைப்படுவதால், மார்ச் 31 வரை செல்லத்தக்க இலவச பயண அட்டைகளை செப்., 30ம் தேதி வரை நீட்டித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.