sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை; குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை'

/

'எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை; குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை'

'எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை; குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை'

'எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை; குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை'


ADDED : ஏப் 22, 2025 05:39 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானிய கோரிக்கையில், 118 அறிவிப்புகளை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அவற்றின் விபரம்:

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கிண்டி பல்நோக்கு மருத்துவமனை உட்பட, 14 மருத்துவமனைகளில், 500 முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்

வாடகையில் செயல்படும் 300 துணை சுகாதார நிலையங்களுக்கு, 137.60 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்

கிராமங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'டயாலிசிஸ்' சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்

தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, 18 வயதுக்கு உட்பட்ட 7,618 குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவ தேவைகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்

எடை குறைவான மற்றும் தொடர் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு, 8.07 கோடி ரூபாயில், 'முதல்வரின் சிசு பாதுகாப்பு பெட்டகம்' வழங்கப்படும்

அனைத்து மாவட்டங்களிலும், 10,000 மக்கள் தொகைக்கேற்ப, 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

கவுரவ சுவர்


உடல் உறுப்பு தானம் செய்வோரை கவுரவிக்கும் வகையில், மருத்துவமனைகளில், 'கவுரவ சுவர்' அமைக்கப்படும்

பழுதடைந்த வாகனங்களுக்கு மாற்றாக, 87 ஆம்புலன்ஸ், 38 அமரர் ஊர்திகள், 38 குளிர்சாதன பெட்டிகள் ஆகியவை, 26.71 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்

சென்னை ஸ்டான்லி, திருச்சி, விருதுநகர், துாத்துக்குடி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவம், பல் மருத்துவம் ஆயுஷ், சுகாதாரம் சார்ந்த பன்முக ஆராய்ச்சி மையங்கள், 25 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், தினமும் ஒவ்வொரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள் மாற்றப்படும்

 ↓வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, 'சோமாட்ரோகான்' என்ற ஹார்மோன் ஊசிகள், 13.28 கோடி ரூபாயில் செலுத்தப்படும்

 ↓கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், தோல் நோய், எலும்பு அறுவை சிகிச்சை, நுரையீரல் அறுவை சிகிச்சை துவக்கப்படும்.

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்


 ↓சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பல் நல பரிசோதனை பிரிவு துவக்கப்படும்

 ↓'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்

 ↓500 நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில், ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும்

 ↓சிறு வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றா நோய் பரிசோதனை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மேற்கொள்ளப்படும்

 ↓தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், இலவசமாக எய்ட்ஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

 ↓போதை தரக்கூடிய மருந்துகள் நடமாட்டத்தை கண்காணிக்க, மருந்து ஆய்வாளர்களை கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us