உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 02, 2025 06:17 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் தனி வாட்ஸாப் குழு அமைக்கப்படும். மாவட்ட வாரியாக தகவல் தொழில்நுட்ப அமைப்பு சார்பில், 'வார் ரூம்' ஏற்படுத்தப்படும். புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்கள் இப்பிரிவினருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
ஒன்றியம், வட்டம், நகர் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள், பிரச்னைகளை, பிரசாரங்களை, 'ஹைப்பர் லோக்கல் ஆக்டிவிட்டி' முறையில் முன்னிலைப்படுத்த வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் சோஷியல் மீடியாக்களில் கணக்கு தொடங்க வேண்டும். பொதுக்குழு வாயிலாக நம் கருத்து 30,000 பேருக்கு போய் சேர்கிறது என்றால், சோஷியல் மீடியாவால், 30 லட்சம் பேருக்கு சென்று சேரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
