ADDED : அக் 02, 2025 06:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் தேர்தல் களத்தில் வெளியாகும் தலைவர்களின் முழு பேச்சு தவிர, சுவாரசிய மான துணுக்குகளும் ஏராளமாக கொட்டிக் கிடக்கும். இவற்றை வாசகர்கள் வெகுவாக ரசித்தார் கள். தினமலர் தேர்தல் களம் பக்கங்களில் இடம் பெறும் துணுக்கு செய்திகளுக்கு முதன் மையான ரசிகர் என்று பார்த் தால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைத்தான் குறிப்பிட வேண்டும்.
ரசனை மிகுந்த கருணா நிதியால், தனது கட்சியினர் குறித்த நகைச்சுவையான செய்திகளையும் படித்து வாய்விட்டு சிரிக்க முடிந்தது. அறிவாலயம் செல்லும் தினமலர் நிருபரிடம் மட்டுமின்றி, அலுவலகத்துக்கே போன் போட் டும் மனம் விட்டு பாராட்டி இருக்கிறார் பல முறை.