sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ' ரிப்போர்ட்'

/

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ' ரிப்போர்ட்'

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ' ரிப்போர்ட்'

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ' ரிப்போர்ட்'

11


ADDED : ஜூன் 26, 2025 08:21 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 08:21 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள கூமாபட்டி கிராமம் குறித்து, அம்மாவட்ட முன்னாள் கலெக்டர், நேரில் சென்று புகைப்படம் எடுத்ததுடன், அந்த கிராமம் குறித்த தகவல்களை பதிவிட்டு உள்ளார்.

தற்போது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் கூமாப்பட்டி என்ற பெயர் டிரெண்டாகி வருகிறது. அந்த கிராமத்தைச் இளைஞர் ஒருவர்,அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டியபடி தனது பாணியில் பேசியவாறு வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலாக துவங்கியது.இதனை பார்த்த சிலர் அந்த கிராமத்திற்கு படையெடுக்க துவங்கி விட்டனர். இன்னும் பலர், கூமாபட்டி குறித்து வீடியோ வெளியிட துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், கூமாபட்டி மாவட்டம் அமைந்துள்ள விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் அந்த கிராமம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு முதல் விருதுநகர் கலெக்டராக இருந்த அவரை கடந்த 23ம் தேதி சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...

நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..

கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.

அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!

கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !! இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us