மருத்துவ கல்வி மேலாண்மை அமைப்புக்கு நிதி ஒதுக்கீடு
மருத்துவ கல்வி மேலாண்மை அமைப்புக்கு நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 12, 2024 01:09 AM
சென்னை: தமிழகத்தில், மாநில மருத்துவக் கல்வி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு, 87.08 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் ஆண்டுதோறும் 5,050 எம்.பி.பி.எஸ்., சேர்க்கை நடக்கிறது. தேவை கூடுவதை கவனத்தில் கொண்டு, வலுவான பாடத்திட்ட சீர்திருத்தங்கள், ஆசிரியர் மேம்பாடு, அதிநவீன ஆராய்ச்சி மற்றும் உறுதியான தலைமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநில மருத்துவக் கல்வி மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு, மருத்துவக் கல்வி ஆராய்ச்சிகள், தரவு மேலாண்மை, கற்றல் செயல்முறைகள் போன்றவற்றுக்கு, 87.08 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் வாயிலாக செயல்படுவதுடன், உயர் தரமான மற்றும் பயனுள்ள கண்காணிப்பு வாயிலாக, மேம்படுத்தப்பட்ட கல்வி சேவை வழங்குவது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.