தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ஆராய்ச்சிக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்'

 'ஆராய்ச்சிக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்'

 'ஆராய்ச்சிக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்'


ADDED : மே 01, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யின் 67ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது:

சர்வதேச அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுக்கு, அமெரிக்கா தன் ஜி.டி.பி.,யில் 3.5 சதவீதம், சீனா 2.40 சதவீதம் செலவிடுகின்றன. ஆனால், நம் நாட்டில் 0.65 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது; இதை அதிகரிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், தொழில் துறைகளுடன் இணைந்து செயல்படுவது குறைவாக உள்ளது. இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். அப்படி குறைப்பதன் வாயிலாக, தொழில் துறை வேலைவாய்ப்புகளுக்கு, மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்.

இந்திய ஐ.டி., துறையில் 50 முதல் 60 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டியுள்ளது. எனவே, ஐ.டி., துறை மட்டுமே, இந்தியாவின் வேலைவாய்ப்பு சவாலுக்கு தீர்வாக இருக்க முடியாது.

உற்பத்தி துறை மற்றும் திறன் மேம்பாட்டுக்கு, இந்தியா மிக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தென் கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் வலுவான உற்பத்தி தளத்துடன், வர்த்தக திறன்களை இணைத்து, நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில், தொழில்நுட்பமானது நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவியாக இருக்குமே தவிர, மாற்றாக இருக்காது.

அதற்கேற்ப கல்வி நிறுவனங்களும், தொழில்நுட்பம், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் உலக அளவிலான சவால்களுக்கு ஏற்ற திறன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us