தொடருது காஸ் டேங்கர் ஸ்டிரைக்; பாதிப்பில்லை என்கிறது ஐ.ஓ.சி.,
தொடருது காஸ் டேங்கர் ஸ்டிரைக்; பாதிப்பில்லை என்கிறது ஐ.ஓ.சி.,
ADDED : அக் 12, 2025 11:05 PM

நாமக்கல்: 'சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
தென்மண்டல எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், அக்., 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக நடந்த பேச்சு தோல்வியில் முடிந்த நிலையில், நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன - ஐ.ஓ.சி., தென் மண்டல அலுவலகம் வெளியிட்டுஉள்ள அறிக்கை:
காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தத்தை தொடங்கி யிருப்பது சட்டவிரோதம்.
எதிர்பாராத சூழல் உருவானாலும், மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ், தென்மாநிலங்களில் சமையல் காஸ் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.
இண்டேன், பி.பி.சி., - எச்.பி.சி., வினியோகஸ்தர்கள் தேவைக்கேற்ப காஸ் சிலிண்டர்களை இருப்பில் வைத்துள்ளனர். இதனால் மக்கள் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.