ADDED : ஜூன் 10, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலரான நடிகை கவுதமி நேற்று அளித்த பேட்டியில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து, பெரிதாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
''தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. தி.மு.க., மீண்டும் தலைநிமிர முடியாத அளவிற்கு, 2026 தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,” என்றார்.
ம.நீ.ம., தலைவர் கமல், தி.மு.க.,விடம் ராஜ்யசபா எம்.பி., சீட் பெற்றது குறித்து கேட்டபோது, “மனிதர்கள் யாராக இருந்தாலும் சொன்னதை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும்,” என கூறினார்.