தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


UPDATED : ஜன 31, 2025 09:16 AM

ADDED : ஜன 31, 2025 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2025 09:16 AM ADDED : ஜன 31, 2025 09:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: செல்லப்பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த வசதியாக, நாய் மற்றும் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதியளித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மொத்தம் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், முக்கியமாக சென்னையில் செல்லப் பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த, பிரத்யேக மென்பொருளை உருவாக்கி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தவும், அந்த கொட்டகைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட செயல்முறைகளுக்கும் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சிப்பில் விலங்கின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது மற்றும் தடுப்பூசி செலுத்திய விபரத்துடன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தனி அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், தங்களின் வளர்ப்பு பிராணிகள் எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இது குறித்து சென்னை மாநகராட்சியின் கால்நடைத்துறை அதிகாரி கூறுகையில், 'மைக்ரோசிப் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 6 கால்நடை மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை அறிவியல் பல்கலை மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது,' என்றார்.

கடந்த 2024ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, சென்னையில் மட்டும் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us