ADDED : அக் 13, 2024 08:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை, வரும் 14ம் தேதி வெளியிடப்படும்' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பதிவு:
தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழங்கிய ஆலோசனையின்படி, பள்ளிக்கல்வித் துறை சார்பில், வரும் 14ம் தேதி நடப்பு கல்வி ஆண்டிற்கான, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.