வேலைவாய்ப்பு பெற இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
வேலைவாய்ப்பு பெற இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
ADDED : செப் 09, 2026 04:24 AM
''முன்னாள் படை வீரர்களுக்கான மாதாந்திர நிதியுதவி, 4,000 ரூபாயில் இருந் து 6,000- ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும்,'' என, அமைச்சர் தென்னரசு தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
முதல்வரின் உதவி மைய இணையதளத்தில், செயற்கை நுண்ணறிவு திறனுடைய, 'சாட்பாட்' மற்றும் உரையாடும் 'வாய்ஸ் பாட்' சேவை அறிமுகப்படுத்தப்படும்
முதல்வரின் உதவி மைய இணையதள சேவைகளை எளிதில் பயன்படுத்த, அனைத்து கலெக்டர்கள் அலுவலகங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில், 'டிஜிட்டல் கியோஸ்க்' நிறுவ, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, பொது நல நோக்கில் உதவிகளை செய்யும் அயலக தமிழர்களுக்கு, 'வெற்றித் தமிழர் விருது' வழங்கி கவுரவிக்கப்படும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உடனடி உலகளாவிய பொருத்தம் என்ற தளம் உருவாக்கப்படும்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெறும் பொருட்டு, இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படும்
முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி, 4,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உய ர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
