சென்னையில் வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி; தந்தை கண் முன்பே பரிதாபம்
சென்னையில் வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி; தந்தை கண் முன்பே பரிதாபம்
ADDED : பிப் 14, 2025 01:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் தந்தை கண் முன்பே மகள் வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வந்த ஒரு தம்பதியின் மகள் வாசலில் உள்ள கேட்டை திறந்து மூடியுள்ளார். அப்போது 7 வயது சிறுமி கேட்டை மூடிய போது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மகளை தந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்த போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.
படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுமி மீது கேட் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தந்தை கண் முன்பே நடந்துள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் இணையத்தில் வைரலாகி கண் கலங்க வைத்துள்ளது.

