அரசு பஸ் மோதி சிறுமி பலி ; பெற்றோர் கண் முன் பரிதாபம்
அரசு பஸ் மோதி சிறுமி பலி ; பெற்றோர் கண் முன் பரிதாபம்
ADDED : ஜன 01, 2024 06:28 AM
திருநெல்வேலி : வள்ளியூரில் தாயாருடன் டூவீலரில் சென்ற சிறுமி அரசு பஸ் மோதி பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே ஆலங்குளத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சகுந்தலா. இருவரும் நேற்று வள்ளியூருக்கு பொருட்கள் வாங்க தனித்தனி டூவீலர்களில் வந்திருந்தனர். அவர்களது மகள் வர்ஷிகா 8, தாய் சகுந்தலாவின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் வள்ளியூர் பழைய சந்தை அருகே சென்றபோது டூவீலர் மீது மோதியதில் வர்ஷிகா காயமுற்றார். நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். வள்ளியூர் போலீசார் விசாரித்தனர்.
வள்ளியூர் மெயின் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் டூவீலர்களில் செல்வோர் நிலைதடுமாறி பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்களுக்குள் சிக்கி பலியாகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.