ADDED : மே 29, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலை மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில், தி.மு.க.,வின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய, சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும், பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை, மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது இந்த தீர்ப்பு.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும், புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து, புகார் அளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.
மனம் தளராது போராடி வெற்றி கண்டுள்ள, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாராட்டுகள்.
- நாகேந்திரன்,
தமிழக பா.ஜ., தலைவர்

