ADDED : ஆக 24, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரியில் நேற்று முன்தினம், பா.ம.க., பிரமுகர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, ஜி.கே.மணிக்கு முதுகுத்தண்டில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது; நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள டாக்டர்களின் பரிந்துரைப்படி, உடனடியாக சென்னை வந்த அவர், நேற்று காலை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுகுத்தண்டு வலி காரணமாக, கடந்த ஜூன் மாதம், அப்போலோவில் 10 நாட்களுக்கும் மேலாக, அவர் சிகிச்சை பெற்றார்.