ADDED : ஜன 22, 2026 01:11 AM

டாவோஸ்: உலகமயமாக்கல் என்பது தோல்வியடைந்த பொருளாதார கொள்கை; அதற்கு பதிலாக 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற தங்களின் கொள்கையை, உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் அவர் பேசியது:
உலகமயமாக்கல்மேற்கத்திய நாடுகளையும், அமெரிக்காவையும் தோல்வியடைய செய்துள்ளது.
அந்த கொள்கை, கடந்த பல தசாப்தங்களாக ஏற்றுமதி, வெளிநாட்டில் உற்பத்தி, தொலைதுாரத்தில் வினியோக தொடர் அமைப்பது, உலகின் மிகக்குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை தேடுவது ஆகியவற்றை மையமாக கொண்டிருந்தது. இதனால், அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்துறை அடித்தளம் வலுவிழந்தது.
உலகமயமாக்கல் உலகை சிறந்ததாக்கும் என்று கூறப்பட்டாலும், உண்மையில், அது உள்நாட்டு தொழில்களை வெறுமையாக்கி, தேசிய பொருளாதாரங்களை சீரழித்து வருகிறது. எனவே, இதற்கு மாற்றாக, 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையை பின்பற்ற துவங்கியுள்ளோ ம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

