ஞானசேகரன் தி.மு.க.,வை சேர்ந்தவர்: வீடியோ வெளியீடு
ஞானசேகரன் தி.மு.க.,வை சேர்ந்தவர்: வீடியோ வெளியீடு
ADDED : டிச 31, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் தி.மு.க.,வை சேர்ந்தவர் என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின; அமைச்சர்கள் மறுத்தனர்.
அவர் அமைச்சர் சுப்பிரமணியன், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நேற்று வெளியிட்டது.
'அமைச்சர்களை ஏராளமானோர் சந்திப்பர்; அந்த வகையில் அவர் சந்தித்திருக்கலாம். அவர், தி.மு.க.,வில் இல்லை' என, மீண்டும் அமைச்சர்கள் மறுத்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோவை சத்யன், தி.மு.க., பவள விழாவில் ஞானசேகரன் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டு, இந்த ஆதாரம் போதுமா என்று கேட்டுள்ளார்.