தி.மு.க., கூட்டங்களில் ஞானசேகரன் பங்கேற்பு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தி.மு.க., கூட்டங்களில் ஞானசேகரன் பங்கேற்பு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ADDED : டிச 26, 2024 05:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க., பிரமுகர் தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தி.மு.க., சார்பில் நடந்த கூட்டங்களில் ஞானசேகரன் பெயர் இடம்பெற்று உள்ளது.
அவர் மீது 13க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரை முன்பே குண்டாசில் அடைத்து இருந்தால் இச்சம்பவம் நடந்து இருக்குமா? இவ்வாறு அவர் கூறினார்.

