ADDED : அக் 16, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாத புரத்தில் நேற்று நடந்த சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ராமநாத புரம் அருகே சக்கரக்கோட்டை பகுதியில் சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது.
இதில் ராமநாதபுரம் மட்டுமின்றி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விற் பனைக்காக ஏராளமான வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இவற்றை வாங்கிச் செல்ல வியாபாரிகள், பொதுமக்கள் வந்திருந்தனர். தீபாவளி பண்டிகை காரணமாக வழக்கமான விலையை விட ஆடு ஒன்றுக்கு ரூ.2000 முதல் 3000 வரை கூடுதலாக விற்றனர். இதில்ரூ.2 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.