UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 04:44 PM
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில், த.வெ.க., வேட்பாளர் சத்தியபாமாவை உருவ கேலி செய்யும் விதமாக பேசியது கண்டனத்திற்கு உரியது. தந்தையும், மகனும் பிரசார மேடைகளிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், பெண்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர் என்பதை மறந்து, பெண்களை அவர்கள் அநாகரிகமாக பேசி வருவது, தொடர்கதையாகி விட்டது. இதுபோன்ற பேச்சுக்களை, தி.மு.க.,வினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக்கட்சி வேட்பாளர்களை எதிர்க்க திராணியின்றி, அநாகரிக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பது தான் தி.மு.க.,வின், 70 ஆண்டு பிரசார முறையா?
தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கி செல்லும் தி.மு.க., எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை.
– வானதி,
முன்னாள் எம்.எல்.ஏ.,
பா.ஜ.,
