ADDED : மார் 15, 2026 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாயும், ஆபரண தங்கம் சவரனுக்கு, 1,120 ரூபாயும் விலை குறைந்தது.
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதனால், நம் நாட்டில் அதன் விலை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தின ம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,900 ரூபாய்க்கும், சவரன், 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற் று, தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் குறைந்து, 14,760 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,120 ரூபாய் சரிவடைந்து, 1,18,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப் பட்டது.

