ADDED : அக் 24, 2024 02:43 AM
சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி, வைர நகை வாங்குவோருக்கு, தங்க நாணயம் பரிசு உட்பட, பல்வேறு சலுகைகளை 'ஜோயாலுகாஸ்' அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
தீபாவளி நெருங்கும் நிலையில், நகைகள் வாங்க, அனைவரும் ஆர்வம் காட்டுவது வழக்கம். பண்டிகை காலத்தில் தங்க நகை வாங்குவது, அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செயலாக அமைந்துள்ளது.
இது போன்ற பண்டிகை காலங்களில், மக்கள் நம்பிக்கையுடன், தங்க நகை வாங்க விரும்பும் இடமாக, ஜோயாலுகாஸ் அமைந்துள்ளது. இதை கருத்தில் வைத்து, இந்த ஆண்டு, 'மகிழ்ச்சி மின்னும் தீபாவளி' அதாவது 'ஜோய் வாலி தீபாவளி' என்ற பெயரில், தீபாவளி கொண்டாட்டத்தை, ஜோயாலுகாஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
நகை வாங்குவதில், ஒரு நல்ல அனுபவத்தை மக்கள் பெறுவதற்காக, சிறப்பு சலுகைகள் மட்டுமல்லாது, விசேஷ வடிவமைப்புகளையும், ஜோயாலுகாஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வகையில் கொண்டாட்டத்தின் இதயமாக ஜோயாலுகாஸ் திகழ்கிறது.
ஜோயாலுகாஸில் 'மகிழ்ச்சி மின்னும் தீபாவளி' கொண்டாட்டம், அக்., 18 ல் துவங்கியது. நவ., 3 வரை, இந்த கொண்டாட்ட காலத்தில் நகை வாங்குவோரை சந்தோஷப்படுத்தும் வகையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, ஒரு லட்சம் ரூபாய், அதற்கு மேற்பட்ட விலையில், வைரம், 'அன்கட்' வைர நகைகளை வாங்கினால், சிறப்பு சலுகையாக ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
இதற்கு அடுத்தபடியாக, 50,000 ரூபாய், அதற்கு மேல் தங்கம் மற்றும் பிரஸியஸ் நகை வாங்குவோருக்கு, 1,000 ரூபாய் மதிப்புள்ள 'கிப்ட் வவுச்சர்' வழங்கப்படும்.
இத்துடன், 10,000 ரூபாய் மதிப்புள்ள, வெள்ளி நகை வாங்குவோருக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள 'கிப்ட் வவுச்சர்' வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர்கள், 10 சதவீத தொகயை செலுத்தி விலையை, லாக் செய்து பாதுகாப்பாக நகை வாங்கலாம். பழைய தங்க நகையை, எக்ஸ்சேஞ் செய்து, அதற்கு பதிலாக, 100 சதவீதம் 'ெஹச்.யு.ஐ.டி.916' ஹால்மார்க் தங்க நகைகளாக வாங்கலாம்.
இந்த சிறப்பு சலுகைகளை, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, ஜோயாலுகாஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுகாஸ் கூறியதாவது:
ஒவ்வொரு இந்தியரும், ஆவலுடன் காத்திருக்கும் பண்டிகைகளில் ஒன்றாக, தீபாவளி அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தீபாவளி பண்டிகை காலத்தில், வாங்கப்படும் நகைகள், புனிதம் மற்றும் செழுமையின் அடையாளமாக கருதப்படுகிறது.
இதற்காக வந்துள்ள புதிய கலெக் ஷன்களையும், சிறப்பு சலுகைகளையும் பயன்படுத்தி தீபாவளி கொண்டாட்டத்தை பிரகாசமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.