தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் கொள்ளை எதிரொலி : சபரிமலையில் கிடுக்கிப்பிடி

 தங்கம் கொள்ளை எதிரொலி : சபரிமலையில் கிடுக்கிப்பிடி

 தங்கம் கொள்ளை எதிரொலி : சபரிமலையில் கிடுக்கிப்பிடி


ADDED : நவ 30, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சபரிமலை: 'சபரிமலையில், உரிய ரசீது இல்லாமல் பூசாரி கள் நெய்யபிஷேகம் செய்யக்கூடாது' என, திரு விதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது.

மண்டல மகர விளக்கு சீசனில், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், நெய்யபிஷேகம் அதிகாலை 3:30- மணிக்கு தொடங்கி 11:30 வரை நடைபெறும். இதற்கு நீண்ட வரிசை காணப்படும்.

இங்கு பூசாரிகள் சிலர், பக்தர்களிடம் தனியாக பணம் பெற்று, அபிஷேகம் செய்வது வழக்கம். இது குறித்து புகார் எழுந்தது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரித்தனர். 'உரிய ரசீது பெற்று மட்டுமே நெய் அபிஷேகம் செய்ய வேண்டும்' என, தேவசம்போர்டுக்கு விஜிலென்ஸ் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, 'பூசாரிகள் தனிப்பட்ட முறையில் நெய் அபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும். செய்யும் பட்சத்தில், உரிய ரசீது பெற வேண்டும்' என, செயல் அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

பூசாரிகள், நெய் விற்பனை செய்வதாக குறித்து விசாரித்த விஜிலென்ஸ், இது தொடரக் கூடாது என்றும் கூறியுள்ளது.

சபரிமலையில் நடைபெற்ற தங்கம் கொள்ளையில், இங்கு உதவி பூசாரியாக பணியாற்றிய உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பூசாரிகளுக்கும் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட தொடங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us