ADDED : அக் 14, 2025 03:28 AM

சென்னை : தமிழகத்தில் நேற்று தங்கம் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, 92,640 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
பல நாடுகளும், சர்வதேச முதலீட்டாளர்களும் அதிகளவில் தங்கம் வாங்குவதால், சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. நம் நாட்டிலும் தங்கம் விலை உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 11,525 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 92,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 195 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 11,580 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, 92,640 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 197 ரூபாய்க்கு விற்கப்பட்டது.