ADDED : அக் 22, 2025 03:11 AM
சென்னை: இந்த தீபாவளிக்கு தங்கம் விற்பனை அதிகரிக்கவில்லை. இதற்கு, கடுமையான விலை உயர்வே காரணம்.
தமிழகத்தில் உள்ள நகை கடைகளில் தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன.
தீபாவளி, அக் ஷய திருதியை ஆகிய சுப தினங்களில் தங்கம் வாங்குவதை, மக்கள் விரும்புகின்றனர். இதனால், அந்த நாட்களில் நகை வாங்குவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
மொத் த பணம் கொடுத்து நகை வாங்க முடியாதவர்களும், மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்தி, நகைகளை வாங்குகின்றனர்.
இதனால், தீபாவளிக்கு தங்கம் விற்பனை வழக்கத்தை விட, 25 சதவீதம் - 30 சதவீதம் அதிகரிக்கும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி கொ ண்டாடப்பட்டது. ஆனால், தங்கம் விற்பனை அதிகரிக்காமல், தினசரி விற்பனை வழக்கமான அளவிலேயே இருந்துள்ளது.
இதுகுறித்து, தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு தீபா வளிக்கு, 7,455 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் கிராம் விலை இந்த தீபாவளிக்கு, 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஓராண்டில் சவரனுக்கு, 40,000 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தற்போது, சவரன் விலை, 96,000 ரூபாய் என்பது மிகப்பெரிய விலை ஏற்றம். இவ்வளவு விலை கொடுத்து தங்கம் வாங்கினால், தீபாவளிக்கான மற்ற செலவுகளை சமாளிப்பது சிரமம் என்பதால், இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்க பலருக்கு ஆர்வம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.