மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
ADDED : நவ 18, 2024 10:07 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தங்கம் தவிர்த்த முதலீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் மட்டும் ரூ.3,000க்கும் கூடுதலாக குறைந்தது. இது விஷேசங்களுக்கு தங்க நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (நவ.,18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.55,960க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், தங்கம் விலை மீண்டும் 56 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து, ரூ.6,995க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம் (கிராமில்)
நவ., 18ல் - ரூ.6,995 - ரூ.60 உயர்வு
நவ.,17ல் - ரூ.6,935 - விலையில் மாற்றம் இல்லை
நவ.,16ல் - ரூ.6,935 - ரூ.10 குறைவு
நவ.,15ல் - ரூ.6,945 - ரூ. 10 அதிகரிப்பு
நவ.,14ல் - ரூ.6,935 - ரூ.110 குறைவு