ADDED : ஜூன் 30, 2026 11:46 PM

சென்னை: சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,300 ரூபாய்க்கும், சவரன், 1,06,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு, 270 ரூபாய் குறைந்து, 13,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,160 ரூபாய் சரிவடைந்து, 1,04,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை தங்கம் கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 13,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,05,600 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, நேற்று தங்கம் சவரனுக்கு, 800 ரூபாய் குறைந்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை.
