ADDED : அக் 19, 2025 12:41 AM
சென்னை:தமிழகத்தில் நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு, 2,000 ரூபாய் குறைந்த நிலையில் மாலையில், 400 ரூபாய் அதிகரித்தது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் சவரனுக்கு, 1,600 ரூபாய் சரிவடைந்தது.
சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,200 ரூபாய், சவரன், 97,600 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. குறிப்பாக, அன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு, 2,400 ரூபாய் அதிகரித்தது.
வெள்ளி கிராம், 203 ரூ பாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 250 ரூபாய் குறைந்து, 11,950 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 2,000 ரூபாய் சரிவடைந்து, 95,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 13 ரூபாய் குறைந்து, 190 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மதியம் தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,600 ரூபாய் குறைந்துள்ளது.