ADDED : ஏப் 06, 2025 12:08 AM
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,400 ரூபாய்க்கும், சவரன், 67,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து, 8,310 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 720 ரூபாய் சரிவடைந்து, 66,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 103 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 1,280 ரூபாய் குறைந்திருந்தது. இதையடுத்து, கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு 2,000 ரூபாய் சரிவடைந்துள்ளது.
எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்து வந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்து வருவது, நகை வாங்குவோரிடம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.