புதிய உச்சத்தில் தங்கம்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி; ரூ.55 ஆயிரத்தை தாண்டியது பவுன் விலை!
புதிய உச்சத்தில் தங்கம்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி; ரூ.55 ஆயிரத்தை தாண்டியது பவுன் விலை!
ADDED : செப் 16, 2024 10:06 AM

சென்னை: தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் தங்கம் விலை இன்று ரூ.55 ஆயிரத்தை தாண்டியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. ஆனால், கடந்த வாரத்தில் மட்டும் பெரும்பாலான வர்த்தக நாட்களில் தங்கம் விலை உயர்ந்தே உள்ளது. தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ரூ.54,920 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.55,040ஆக விற்பனைக்கு வந்துள்ளது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,880க்கும் விற்பனையாகிறது.
அதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து உச்சம்பெற்றே வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.98க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த இரு வாரங்களில் தங்கம் விலையின் மாற்றம் குறித்த விபரம்
செப்.,16ல் - ரூ.55,040
செப்.,15ல் - ரூ.54,920
செப்.,14ல் - ரூ.54,920
செப்.,13ல் - ரூ. 54,600
செப்.,12ல் - ரூ. 53,640
செப்.,11ல் - ரூ. 53,720
செப்.,10ல் - ரூ. 53,416
செப்.,09ல் - ரூ. 53,440
செப்.,08ல் ரூ. 53,440
செப்.,07ல் - ரூ. 53,440
செப்.,06ல் - ரூ. 53,760
செப்.,05ல் - ரூ. 53,360
செப்.,04ல் - ரூ. 53,360

