தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
ADDED : மார் 29, 2025 09:40 AM

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,880க்கும், ஒரு கிராம் ரூ.8,360க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் வார துவக்க நாளான (திங்கள் கிழமை) மார்ச் 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய் கிழமை மார்ச் 25ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் 26ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 27ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் 65,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (மார்ச் 28) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (மார்ச் 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,880க்கும், ஒரு கிராம் ரூ.8,360க்கும் விற்பனையாகிறது.
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.67 ஆயிரத்தை நெருங்கி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.