தங்கம் விலை: காலையில் குறைந்தது, மாலையில் உயர்ந்தது
தங்கம் விலை: காலையில் குறைந்தது, மாலையில் உயர்ந்தது
ADDED : அக் 30, 2025 10:55 PM
சென்னை:  தமிழகத்தில் நேற்று காலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,800 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில், 1,600 ரூபாய் அதிகரித்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 11,325 ரூபாய்க்கும், சவரன், 90,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 166 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,100 ரூபாய்க்கு விற்பனையானது.  சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது.  நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

