2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,400!
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,400!
ADDED : ஏப் 10, 2025 09:51 AM

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 10) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, தமிழகத்தில் கடந்த வாரத்தில் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 09) காலை தங்கம் விலை, கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,290 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 66,320 ரூபாய்க்கு விற்பனையானது.
மதியம் திடீரென தங்கம் விலை கிராமுக்கு மேலும் 120 ரூபாய் அதிகரித்து, 8,410 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 67,280 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை ஆகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.