ஆபரணத் தங்கம் விலையில் பெரும் சரிவு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3000 குறைந்தது
ஆபரணத் தங்கம் விலையில் பெரும் சரிவு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3000 குறைந்தது
ADDED : அக் 28, 2025 03:54 PM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3000 சரிந்து விற்பனையானது.
கடந்த சில வாரங்கள் முன்பு ஆபரணத் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து கொண்டே சென்றது. ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை எட்டிவிடும் வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கூறி வந்தனர். அதன் பின்னர் விலையில் ஏற்றம், இறக்கங்கள் இருந்தது.
இந் நிலையில், இன்று (அக்.28) ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.1200 குறைந்து விற்பனையானது. இதனால் வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்திருந்த வேளையில், அவர்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக மாலையில் சவரன் ரூ.1800 குறைந்து விற்பனையானது.
அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.88,600 ஆக இருக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.11,075 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9000 குறைந்துள்ளது. தங்கம் விலையில் சரிவு காணப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை கணிக்கமுடியாது என்று வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.

