ஒரு வழியாக குறைய துவங்குகிறது தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 சரிவு
ஒரு வழியாக குறைய துவங்குகிறது தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 சரிவு
ADDED : மே 03, 2024 10:29 AM

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை ஆகிறது. அட்சய திருதியை (மே 10) நெருங்கிவரும் நிலையில் தங்கம் விலை குறைந்ததால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 3) சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 சரிந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் 10ம் தேதி அட்சய திருதியை வரவுள்ள நிலையில் தங்கம் விலை ஓரளவு குறையத் துவங்கியதால் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000க்கு விற்பனையாகிறது.