sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.640 குறைவு

/

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.640 குறைவு

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.640 குறைவு

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.640 குறைவு

1


ADDED : மார் 05, 2026 10:09 AM

Google News

1

ADDED : மார் 05, 2026 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கடந்த வாரம், தங்கம், வெள்ளி விலை மிகவும் அதிகரித்தது.

கடந்த சில தினங்களாக, அவற்றின் விலை சற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 3) ஆபரண தங்கம் கிராம், 15,465 ரூபாய்க்கும், சவரன், 1,23,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 315 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (மார்ச் 04) தங்கம் விலை கிராமுக்கு, 265 ரூபாய் குறைந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,120 ரூபாய் சரிவடைந்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 295 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.






      Dinamalar
      Follow us