தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; 3 நாட்களில் ரூ.800 அதிகரிப்பு
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; 3 நாட்களில் ரூ.800 அதிகரிப்பு
ADDED : ஆக 28, 2025 10:00 AM

சென்னை: சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்து கொண்டே வருகின்றன. நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனையாகிறது. இதனால், மீண்டும் தங்கத்தின் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கம் ரூ.75,240ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.9,405க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, சுபமுகூர்த்த தினங்களினால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. 3 நாட்களில் மட்டும் ரூ.800 உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தான் தங்கம் விலை அதிகம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம் (பவுனுக்கு)
28-08-2025- ரூ.75,240
27-08-2025- 75,120
26-08-2025- ரூ.74,840
25-08-2025- ரூ. 74,440
24-08-2025- ரூ. 74,520

